tamilnadu

img

நதிநீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் கூடாது

சென்னை:
நதிநீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்  என்ற மத்திய பாஜக அரசின் முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர்  பெ.சண் முகம் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
அனைத்து நதிநீர்ப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் அமைப்பது என்ற முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. 

இது தொடர்பான மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது மிகவும் தவறானதும், நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக காலம்தாழ்த்துவதற்கே பயன்படும்.ஒவ்வொரு நதிநீர்ப் பிரச்சனையும் வெவ்வேறு தன்மை வாய்ந்ததும், வெவ்வேறு வரலாற்று பின்னணியையும் கொண்டது என்பதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், அதிகாரக் குவிப்பு என்ற நோக்கத்தோடு மத்திய  பாஜக அரசு இத்தகைய திட்டத்தை முன்வைக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனைக்காக தனி ஆணையம் அமைக்கப்பட்டதற்கே ஏறத்தாழ30 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதை கவனப்படுத்துகிறோம்.எனவே, தமிழக அரசு, மத்திய அரசின் இந்த அனைத்து நதிநீர் பிரச்சனைகளுக்கும் ஒரே ஆணையம் என்ற பிரச்சனை குறித்து தனது நிலையை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு எதிரானநிலையை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா விவாதத்திற்கு வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து குரல் கொடுப்பதுடன், இதர மாநிலங்களின் ஆதரவை பெறவும் முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;