tamilnadu

வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை, ஜூலை 4- பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்சாரா திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், கொரோனா காலம் முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க கூடாது, இஎம்ஐ உள்ளிட்டு நுண் நிதி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், சாத்தான்குளம்  இரட்டை படுகொலையை விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும், ஃபிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இணையவழியிலும் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.