tamilnadu

img

தென்மேற்கு பருவமழை இன்னும் 10 நாட்கள் நீடிக்கும்

சென்னை தென்மேற்கு பருவமழை இன்னும் 10 நாட்கள் நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு, நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில்
 கன மழை பெய்யும். வரும் 14 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கன மழை தொடரும் என தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து,வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது. வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது. இது தென் மேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் ஏற்படுகிறது. தென் மேற்கு பருவமழை வட மாநிலங்கள் மற்றும் மேற்கு, கிழக்கு மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்னும் 10 நாட்கள் வரை தென்மேற்கு 
பருவக்காற்று தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகே, வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

 

 

;