கரவொலி-பாராட்டு
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளில் அர்ப்பணிப் போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்து வப் பணியாளர்கள், தூய்மைப் பணியா ளர்கள் மற்றும் இதற்கு துணையாக செயல் படுகின்ற பிற துறைகளின் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வித மாக உறுப்பினர்கள் அனைவரும் கர வொலி எழுப்பி நன்றி தெரிவிக்குமாறு தமி ழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, பேரவைத் தலைவர் ப.தனபால், துணைத் தலைவர் பொள் ளாட்சி வி. ஜெயராமன், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரி வித்து எழுப்பிய கரவொலி அடங்க நீண்ட நேரமானது.
ஒரு மாதம் சிறப்பு ஊதியம்
கொரோனா வைரஸ் நோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டு, சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை யிலே பணிபுரியும் தூய்மைப் பணியாளர் கள் ஆகியோருக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு ஊதியமாக வழங்கப்படும். இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனையிலே சிகிச்சை பெறுகின்றவர்களுக்கு அர்ப் பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்து வம் சார்ந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இவர்கள் எல்லாம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப் பணிப்பு உணர்வோடு பணியாற்று கின்றார்கள். மருத்துவப் பணி என்பது உன்னதப் பணி, மகத்தான பணி. அந்த மகத்தான பணியை சிரமேற்கொண்டு, அச்சம் இல்லாமல், நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற அந்த நபர்களுக்கு உரிய முறையிலே சிகிச்சை அளித்து, குணமடைய செய்து, இன்றைக்கு மகிழ்ச்சியோடு வீடு திரும்பு கின்ற காட்சியை பார்க்க வேண்டும் என்ப தற்காக, இரவு பகலாக பணியாற்றுகின்ற அந்தப் பணியிலே ஈடுபட்டு இருக்கின்ற அனைவரையும் நாம் பாராட்ட கடமைப் பட்டிருக்கின்றோம். எனவே, அரசு எடுத்து வருகின்ற தடுப்புப் பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்து ழைப்பு தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அனைவரையும் கேட்டுக் கொள்கி றேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.