tamilnadu

img

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி மற்றும் ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மட்டுமே பயிற்று மொழி, ஆங்கில வழிக் கல்வி கூடாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கையை அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் வழங்கியுள்ளார். 
இந்த அறிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை என்பது, தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக்கொள்கையே எனத் தெரிவித்தார்.

;