tamilnadu

img

ஆவடியில் ராணுவத்திற்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலம் மீட்கப்படும்

திருவள்ளூர், ஏப்.10- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமார் ஆவடிநகராட்சி மற்றும் திருமுல்லைவாயல், தென்றல்நகர் உள்ளிட்ட பல இடங்களில் கை சின்னத்திற்கு வாக்குகோரி பிரச்சாரம் செய்தார்.இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தெற்கு மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர், நகர செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஜேம்ஸ், யுவராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பூபாலன், பகுதி செயலாளர் ஆர்.ராஜன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஏ.ஜான், ஆர்.சரவணன், லதா, நடராஜன், மகாதேவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி குமணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட ஏராளமான ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.பிரச்சாரத்தின் போது,கே.ஜெயக்குமார் கூறுகையில், ‘ஆவடியில் ராணுவத்திற்கு சொந்தமான சுமார் 1500 ஏக்கர் நிலத்தில் அதானிக்கு காற்றாலை அமைக்க ஏறக்குறைய 150 ஏக்கர் நிலத்தை குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யப்படும். ஆவடி படை, உடை தொழிற்சாலை (ஓசிஎப்) தொடர்ந்து இயங்கும் மற்றும் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என வாக்குறுதி அளித்தார்.

;