tamilnadu

img

இந்திய பொருளாதாரத்தை அரணாக நின்று எல்ஐசி பாதுகாக்கிறது: ஸ்ரீகாந்த் மிஸ்ரா

சென்னை:
உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தபோது இந்தியாவை அரணாக நின்று காத்தது எல்ஐசி நிறுவனம் தான் என்று ஏஐஐஇஏ அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீ காந்த் மிஸ்ரா பெருமையோடு கூறினார்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்மாநிலச் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அதில்  அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு;

மத்திய பாஜக அரசு மக்களைப் பாதுகாக்கும் தன் பொறுப்பிலிருந்து நழுவிவருகிறது. ஆனால் காப்பீட்டுக்கழகம் அவ்வாறு இருக்க முடியாது, நிறுவனத்தை,மக்களை ஊழியர்களை, முகவர்களை எல்லோரையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாம் 3 வாக்குறுதிகள் கொடுத் தோம், 1956 தேசிய மயத்தின் போது. பாலிசிதாரர் பண பாதுகாப்பு. நிதியை உருப்படியான நலப் பணிகளுக்குப் பயன்படுத்துவது. மதிக்கத் தக்க முதிர்வு பலன்களோடு பாலிசி முடித்துக் கொடுப்பது. இவை மூன்றையும் கம்பீரமாக நாம் நிறைவேற்றி வருகிறோம்.1999ல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. 2000மாவது ஆண்டில் முதல் கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ தனியார் நிறுவனங்கள் வந்தபோதும்  75 விழுக்காடு சந்தைபங்கு  எல்ஐசி வசம் தான் என்பதை விட என்ன சான்று வேண்டும்? நமது அயராத பணியின் மூலம் எல்ஐசி சொத்து மதிப்பு 32 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  மூலதன திரட்டு 30,000 கோடி ரூபாயாக உள்ளது. வராக்கடன் என்று நமக்கு எதிராக அடுத்த ஏவுகணையை நமது விரோதிகள் தொடுக்கிறார்கள். வராக்கடன் என்பது வெறும் 0.8விழுக்காடு தான். அதுவும் கார்ப்பரேட் முதலாளிகள் வைத்த கடனாகும். ஜனவரி மாதம் முடிய சந்தை மதிப்பு, 76 விழுக்காடு  எல்ஐசியில் கையில் உள்ளது. வெறும் ரூ.5 கோடி முதலீட்டில் எத்தனை எத்தனை அரசுத் திட்டங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை எல்ஐசி  செலவு செய்துள்ளது. இப்படிப்பட்ட காப்பீட்டுக் கழகத்தை மக்கள் சக்தியின் துணையோடு பாதுகாப்போம் என்றார்.

;