தியாகதுருகம், செப்.20- ‘வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையானது’ என்ற கிராம பழமொழிபோல ஆனது நாட்டின் வளர்ச்சிக்காக தாங்கள் குடியிருந்த இடத்தை விட்டு அரசு கொடுத்த மாற்று இடத்தில் வசிப்பவர்களின் சோக நிலை. ஆம்.. வேளாண்மை வளர்ச்சிக்காக அணை கட்டுவதற்கு இடம் கொடுத்துவிட்டு அரசால் வழங்கப்பட்ட மாற்று இடத்திற்கு மூன்று தலைமுறையாக பட்டா கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர் இம்மக்கள். விழுப்புரம் மாவட்டம் தியாக துருகம் அருகேயுள்ள வடதொரச லூர் மதுரா கோவிந்தசாமிபுரத்தில் குடியிருக்கும் 200க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினருக்குத்தான் இந்நிலை. ஒன்றுபட்ட தென் ஆற்காடு மாவட்டத்தில் 1969 ஆம் ஆண்டு இப்பகுதியில் மணி முத்தாறு அணை கட்டுவதற்காக நெய்வாநத்தம் கிராமத்தில் வசித்த 97 குடும்பத்தினரை அப்புறப்படுத்தி கோவிந்தசாமிபுரத்தில் குடி யமர்த்தியது தமிழக அரசு. அப்போது ஒவ்வொரு குடும்பத் தினருக்கும் மூன்று ஏக்கர் விவ சாய நிலமும், மூன்று செண்ட் வீட்டு மனையும் தருவதாக அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகேயுள்ள ரிஷிவந்தியம் காப்புக் காட்டில் எண் 16/2 -ல் 300 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதற்காக வனத்துறைக்கு சமமான நிலமும் அரசால் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் நிலம் ஒதுக்கப் பட்டதோடு பட்டா வழங்காமல் கிடப்பில் போட்டு விட்டனர் அதிகாரி கள். பின்னர் 1980ஆம் ஆண்டில் வனச் சட்டம் அமலான பிறகு பட்டா வழங்க மறுக்கப்பட்டது.
தற்போது 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மின் வசதி, அர சின் நலத்திட்ட உதவிகள், வங்கி கடன்கள் என எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். “50 ஆண்டுகளை கடந்து மூன்றாவது தலைமுறையினரும் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம் என வேதனை யோடு கூறினர் முதல் தலைமுறை யைச் சேர்ந்த 70 வயதை கடந்த பச்சையம்மாள், சாமிநாதன், கன்னியம்மாள், வேலாயுதம்ஷ”. தொடர்ச்சியான போராட்டத்தின் போது மத்திய அரசிற்கு 13.12.2007 -ல் அனுப்பப்பட்ட மனு வுக்கு கடந்த 21.1.2015 அன்று சுற்றுச் சூழல், வனத்துறை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கடிதத்தில். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு பெறலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. “மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடம் கொடுத்து 50 ஆண்டுகளுக்கு மேல் அவதிப்படும் குடும்பங்களை தமிழக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது” என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி தெரிவித்தார்
கோவிந்தசாமிபுரத்தில் வசிக் கின்ற குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி செப். 20 அன்று கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய டி.ரவீந்திரன், “விழுப்புரம் மாவட்டத்தை போலவே கிருஷ்ணகிரி மாவட் டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி அணை கட்ட இடம் கொடுத்த 5 கிராம பொது மக்கள் சூளகிரி பகுதியில் தீர்வு ஏற்படாத தரிசு நிலத்தில் குடியமர்த்தப் பட்டனர். மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடம் கொடுத்த இம்மக்கள் கடந்த 50 ஆண்டு கால மாக இந்நிலத்தை பண்படுத்தி வாழ்ந்து வந்தனர். 1986 ஆம் ஆண்டு இந்நிலங்கள் வனநிலமாக மாற்றப் பட்டது. இந்நிலையில் இதுவரை அவர்களுக்கு பட்டா வழங்காதது மட்டுமல்ல தற்போது வனத்துறை அவர்களை நிலத்தை விட்டு வெளி யேற வேண்டுமென நோட்டீசும் கொடுத்து வருகிறது. இது ‘குதிரை கீழே தள்ளியது மட்டுமில்லாமல், குழியும் தோண்டிய கதையாக’ உள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் டி.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி. ஸ்டாலின்மணி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் கோட்டாட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசு நலத்திட்ட உதவிகள், வங்கிக் கடன், மின் இணைப்பு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்வது என வும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையினரின் அறிவுறுத்த லின்படி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து குடும்பத்தினருக்கு பட்டா வழங்க ஆவண செய்ய மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரைப்பது எனவும் கோட்டாட்சியர் எழுத்து மூலமான உறுதி அளித்ததன் காரணமாக காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், விவசாய தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் டி.எம்.ஜெய்சங்கர், கிளைச் செய லாளர் ஏ.ராமு, சிபிஎம் வட்டச் செய லாளர் பி.மணி, மாவட்டக்குழு உறுப்பினர் அ.பா.பெரியசாமி, சங்க நிர்வாகிகள் ஆர்.சாந்தமூர்த்தி, ஜி.அருள்தாஸ், கே.கொளஞ்சி உள்ளிட்ட ஏராளமானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.