tamilnadu

காஷ்மீர் உடைப்பு சர்வாதிகாரமானது சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, ஆக. 6 - ஆயுத உற்பத்தியை தனியாருக்கு திறந்துவிடும் பிரதமர் மோடியின் செயல்தான் தேசத் துரோகமானது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  சாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செவ்வாயன்று (ஆக.6)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், காஷ்மீர் மாநிலத் திற்கான  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மோடி அரசு மிகப்பெரிய ஜனநாயக படு கொலையை நிகழ்த்தி விட்டது. கூட்டாட்சி  மீதும் ஜனநாயகத்தின் மீதும், வேற்றுமை யின் ஒற்றுமை என்று முழங்கிய தத்துவத் தின் மீதும் மோசமான தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. மதவாத பாகிஸ்தானோடு சேர மாட்டோம், மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான்  சேருவோம் என்று முழங்கிய காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் இது. ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது இந்திய கூட்டாட்சிக்கு வைக்கப்பட்ட வேட்டாகும் என்றார். மேலும் அவர் பேசியதாவது: 2 வது முறையாக மோடி அரசு அதிகா ரத்திற்கு வந்த பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்திலேயே தேசிய புலனாய்வு சட்டப் பிரிவை திருத்தியுள்ளனர். சட்டவிரோத நட வடிக்கை தடுப்புச்சட்டத்தை மிகக் கொடூர மான சட்டமாக திருத்தினார்கள். புதிய கல்விக்கொள்கை அறிக்கையை கொண்டு வந்தனர். 44 தொழிலாளர் சட்டங்களை திருத்தி 4 தொகுப்பாக மாற்றும் முயற்சி பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நிலையாகும். காஷ்மீரில் 370சட்டபிரிவு ரத்து செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும்  போராட்டம் நடைபெறும் வேளையில் மத்திய அரசின்  மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத் திற்கும் அதிமுக ஆதரவு தெரிவித்து வருகிறது.  நாட்டு மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் ஆர்எஸ்எஸ் திட்டமான இந்து ராஷ்டிரத்தின் ஒருபகுதி தான் காஷ்மீர் சிறப்பு  அந்தஸ்து ரத்து. பிரிவு 370ல் திருத்தம் செய்ய வேண்டுமானால் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்,  அதன் பின்னர் திருத்தம் செய்து  நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். ஆனால் இவையாவும் செய்யப் படாமல் சர்வாதிகாரமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.  அரவங்காடு பாதுகாப்புத் தளவாடங்கள் தொழிற்சாலை ஆசியாவிலேயே பழமை யானது. சிறப்பான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறன்படைத்தது. இதில் உற்பத்தி செய்யப்பட்ட தளவாடங்களைக் கொண்டு தான்  கார்கில் போரில் இந்திய  ராணுவம் வெற்றி பெற்றது. ஆனால் மோடி அரசோ இந்த ஆலை உள்பட 42 பாதுகாப்பு நிறுவனங்களை கார்ப்பரேசனாக மாற்றம் செய்ய உள்ளது. படிப்படியாக இந்த நிறு வனங்களை  தனியாருக்கு விற்கும் அபாயம் உள்ளது. தேசத்தின் எல்லையை பாதுகாக்கும், ஆயுதத்தை உற்பத்தி செய்யும்  துறையை தனியாருக்கும் விடும் மோடி அரசின் செயல் தேசத் துரோகம் இல்லையா?   இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். வடசென்னை மாவட்டசெயற்குழு   உறுப் பினர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.வி. கிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் பேசி னர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

;