tamilnadu

img

ஏரியில் குத்தகைதாரர்கள் மணல் கொள்ளை

விவசாயிகள், பொதுமக்கள்  கடும் எதிர்ப்பு

காஞ்சிபுரம்,ஜன.13- காஞ்சிபுரம் வட்டம் காவேரிப்பாக்கம், புத்தேரி ஊராட்சியில்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  பயன் படுத்தக் கூடிய ஏரி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில்   உள்ளது. ஏரியில் உள்ள வேலிகாத்தான் மரங்களை வெட்டி எடுத்து அப்புறப் படுத்தி ஏரியை சமன் செய்திட வேண்டும் என்றும், ஏரியின் கரையை பலப்படுத் திட வேண்டும் என்றும் அர சிற்கு விவசாயிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சமீபத்தில் இந்த ஏரி குத்தகைக்கு விடப் பட்டது.  இதனைத் தொடர்ந்து குத்தகைதாரர்கள் மண் மேடு களை வெட்டி எடுப்பதற்கு பதிலாக, அங்குள்ள மரங்களை வெட்டியுள்ள னர். மேலும்,  மேல்புற முள்ள மண்ணை அப்புறப் படுத்திவிட்டு மூன்றடிக்கு கீழே உள்ள மணலை  அனு மதிக்கப்பட்ட அளவு மணலை விட அதிகமாக 6 யூனிட் வரை எடுத்துச் செல்வ தாக கூறப்டுகிறது. லாரியில் மணலை எடுத்து செல்வ தற்காக ஏரியின் கரையை உடைத்துள்ளனர்.  இந்த மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றால், சிறுகாவேரிப்பாக்கம், அம்பி, புத்தேரி ஊராட்சி யின் விவசாயம் முற்றிலு மாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் ஒன்றிய செய லாளர் இ.லாரன்ஸ் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா விடம் திங்களன்று (ஜன.13) மனு அளித்துள்ளார். இது பற்றி லாரன்ஸ் கூறுகையில், ‘ஏரியை தூர்வாரி, நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் தற்போது ஏரி குத்தகை விடப்பட்டு மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனால். 157.19 ஹெக்டரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படுவார்கள். எனவே  இப்பிரச்சனையில் பொதுப் பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’ என்றார்.
 

;