tamilnadu

தேஜோ தொழிலாளர்கள் நாளை ஊர்வலம்

திருவள்ளூர், மே 4 -சோழவரம் அருகே இருளிப்பட்டில் இயங்கி வரும் தேஜோ நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து குடும்பத்துடன் மே 6 ஆம் தேதி ஊர்வலம், பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.சோழவரம் அருகில் உள்ள இருளிப்பட்டில் தனியாருக்குச் சொந்தமான தேஜோ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 159 நிரந்தர தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாகத்துடன் பொன்னரி கோட்டாட்சியர் மற்றும் தொழிலாளர் நலத் துணை ஆணையர் மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தொழிலாளர் விரோத நடவடிக்கையையே தொடர்ந்து மேற் கொள்வதால் மே-6 அன்று இருளிப்பட்டிலுள்ள தேஜோ தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் ஊர்வலமாகச் சென்று ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலையில் கண்டன பொதுக் கூட்டம் நடந்த திட்டமிட்டுள்ளனர்.மே 14-ஆர்ப்பாட்டம்திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் பி.எம்.பிர்லாவிற்கு சொந்தமான எச்.எம்.சென்னை கார் தொழிற்சாலை 1998 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கார் தொழிற்சாலையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ என்ற தனியார் நிறுவனத்திற்கு தற்போது விற்கப்பட்டுள்ளது.தொழிற்சாலை வேறு நிறுவனத்திற்கு விற்கப்படும் போது அதில் பணியாற்றி வரும் 180-கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் அனைவரும் புதிய நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்கள் எனத் தமிழக அரசிற்கும், எச்.எம்.கார் தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்திற்கும் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்திருந்தனர்.இந்த வாக்குறுதியை மீறி பிர்லா நிர்வாகம் தொழிலாளர்களை வெளியேற்றும் போக்கைக் கண்டித்து மே-14 அன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமையில் திருவள்ளூரில் நடந்த சிஐடியு மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் டி.ஏ.லதா, மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் ஆர்.பூபாலன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.