tamilnadu

தஞ்சை மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

தேசிய மாற்றுத்திறனாளி தடகளம்: தஞ்சை அரசுப்பள்ளிகள் அசத்தல்

தஞ்சை, ஜன. 14- சமீபத்தில் நிறைவுப்பெற்ற தேசிய மாற்றுத்திறனாளி (செவித்திறன்) தடகள தொடரில் தஞ்சாவூர் அரசுப்பள்ளிகள் 11 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது.  அகில இந்திய செவித்திறன் குறையுடையோர் விளையாட்டுக் கழகம் நடத்திய இந்த தொடர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சபரிஷா உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து மாணவன் சுகுமார் (ஈட்டியெறிதல்) வெண்கலப் பதக்கமும், மாணவி சசிகலா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலம் என ஹாட்ரிக் பதக்கம் சாதனை புரிந்தார்.  மாணவர் ஜீவா தொடர் ஓட்டத்தில் (மாரத்தான்) தங்கப்பதக்கமும், இதே பிரிவில் மாணவி சாமுண்டீஸ்வரி வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். மேலும், கும்பகோணம் மாதா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கனிமொழி 400மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், மாணவர் மணிகண்டன் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேரில் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவீந்திரன், மாற்றுத்திறனாளி பள்ளி ஆசிரியர்கள் முருகேசன், முத்துமாரி, கிரிஜா, மரகதம், தலைமை ஆசிரியர்கள் சித்ரா, பிச்சை ஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை

திருவண்ணாமலை, ஜன. 14- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்  திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை  பெறும் பொருட்டு உரிய விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி தெரிவித்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க ஏதுவாக வருங்காலங்க ளில் மத்திய- மாநில அரசால் வழங்கப்படும்  உதவித் தொகை,  வங்கிக் கடன் மானியம், கல்வி உதவித்தொகை, திருமண  உதவித்தொகை, தொடர்வண்டி பயண சலுகை, பேருந்து பயணச் சலுகை உட்பட எதிர்வரும் காலங்களில் இந்த  அடையாள அட்டை பயன்படுத்த இருப்பதால் அனைத்து  மாற்றுத்திறனாளிகளும் பெறும் பொருட்டு விண்ணப்பத்து டன் கூடிய மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, மருத்துவச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1 ஆகியவற்றை இணைத்து (செவ்வாய் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) அரசு  வேலை நாட்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருவண்ணாமலை என்ற  முகவரிக்கு விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

;