tamilnadu

img

வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம்

சென்னை, அக். 1 -  அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2022-23 நிதியாண்டுக்கான தொழிற்சாலைகள் மதிப்பீட்டு அறிக்கையின்படி, உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்களிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.