tamilnadu

img

கோவிட்-19: சென்னையில் பாதிப்பு தொடர் அதிகரிப்பு

சென்னையில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,228 ஆக தொடர்ந்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், மொத்தமாக 13,191 பேர்  கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். 5882 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த சூழலில், சென்னையில் கோவிட்-19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை 8,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 743 பேரில், 557 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 

சென்னை மாநகராட்சியில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,538 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் மரணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து,  கோடம்பாக்கத்தில் 1,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் மரணமடைந்துள்ளனர். திரு.வி.க நகரில் 976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9 பேர் மரணமடைந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் பலியாகி உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் மரணமடைந்துள்ளனர். அண்ணா நகரில் 662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் பலியாகி உள்ளனர். வளசரவாக்கத்தில் 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3 பேர் பலியாகி உள்ளனர். அடையாரில் 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் பலியாகி உள்ளனர். 

;