tamilnadu

img

10,11 ஆம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகம், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு வரும் ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவிகித மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 10, 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மே-23 ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.