மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினருமான மறைந்த சுந்தாவின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சுந்தாவின் மனைவி ராணிசுந்தாவும், மகன் சிந்தன்சுந்தாவும் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ. 10 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமாரிடம் வழங்கினர். நகரச் செயலாளர் சி.சங்கர், நகரக்குழு உறுப்பினர் சங்கர், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சசிதரன், சிவா, சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.