tamilnadu

img

கலவை வட்டத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டத்தில் தோழர் என்.சங்கரய்யா 103ஆவது பிறந்தநாள் விழா, தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி வட்டச் செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் நடைபெற்றது. அப்போது வட்டக்குழு சார்பில் 25 தீக்கதிர் சந்தா வழங்க மாவட்ட செயலாளர் என்.காசிநாதன் பெற்றுக் கொண்டார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ரகுபதி, வேட்டைக்கார சங்க மாநில தலைவர் சேட்டு, மாவட்டச் செயலாளர் வரதராஜன், சிபிஎம் நிர்வாகிகள் ஆ.சம்பத், எஸ்.விஜயா, ஆ.சரோஜா, வெங்கடேசன், ஈ.ராஜா, சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.