திருவண்ணாமலை,ஜன.7- திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக் கால் கிராம ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக மாநில நிதி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவி யல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் பூங்காவை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செய லாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலு மணி வியாழனன்று(பிப்.6) திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சி 8.30 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சுற்றுவட்டார பகுதிகளான, இனாம்காரி யந்தல், வேடியப்பனூர், துர்க்கை நம்மி யந்தல், தி.மலை நகர பெண்கள் பள்ளி களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அழைத்து வரப்பட்டனர். காலை 6 மணிக்கு தங்களது பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்து, பூங்காவிற்கு வாக னங்களில் அழைத்து வரப்பட்டனர். 7 மணிக்கு திறந்தவெளி அரங்கில் அமரவைக்கப்பட்டனர். 7 மணி முதல், எதிர்வெயிலில் காக்கவைக்கப்பட்டனர். 9.30 மணிக்கு அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதா? என்று கேட்டதை தொடர்ந்து, மாணவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. அதைப் பெறுவதற்கு மாணவர்கள் முண்டிய டித்தனர். பின்னர் அமைச்சர் 10 மணிக்கு அங்கு வந்தார். துவக்கவிழா நிகழ்ச்சிகள் 10.30 மணிக்கு முடிந்தது. அதன் பிறகுதான் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப் பட்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதை வாங்கிய மாணவ, மாணவியர், அதை சாப்பிட முடியாமல் தவித்தனர். தரையில் உட்காரக்கூடாது, வெளியே செல்லக்கூடாது, உள்ளே செல்லக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டா தால், செய்வதறியாது திகைத்து நின்றனர். ஒரு வழியாக 11 மணிக்கு அங்கு வந்த வாகனங்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை கையில் எடுத்துக் கொண்டு ஏறிச் சென்றனர். மாணவ, மாணவியரின் இந்த தவிப்பை பார்த்து அங்கிருந்தவர்கள் பரிதாப உணர்வுடன் சென்றனர்.