‘மழைநீர் சேகரிப்பு, தூய்மை தமிழகம், முன்னோடி தமிழகம்’ குறித்து காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டுவரும் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.