உளுந்தூர்பேட்டை, ஜூன் 24- விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலத் தில் எஸ்எஸ்வி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மடப்பட்டு அருகிலுள்ள கருவேப் பிலைப்பாளை யம் கிராமத்தில் வசிக்கும் அருணாச்சலம் மகன் சுபாஷ் எல்கேஜி முதல் படித்துவந்தான். கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த போது காலாண்டு தேர்வு நெருங்கிய நிலையில் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பள்ளிக்கு வர வேண்டாம் எனக்கூறி வெளியே அனுப்பி விட்டது பள்ளி நிர்வாகம். ஏழ்மை நிலையில் உள்ள அவரது தந்தை கடன் பெற்று ரூ.20 ஆயிரத்தை கட்ட முயன்றுள்ளார். ஆனால் முழு தொகையும் கட்ட வேண்டும் எனக்கூறி வெளியே அனுப்பிவிட்டது. இதனால் கடந்த கல்வி யாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் சுபாஷ் மனவேதனை அடைந்து வீட்டில் இருந்துள் ளார். இந்நிலையில், அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க லாம் என சமீபத்தில் பள் ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது ரூ.79 ஆயிரம் கொடுத்தால் தான் மாற்றுச் சான்றிதழை தர முடியும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் கடும் மனவேதனை யடைந்த சுபாசும், அவரது தந்தையும் தங்களால் இவ்வ ளவு தொகையை கட்ட இயலாது. ஏழ்மை நிலையில் உள்ள தனக்கு எஸ்எஸ்வி தனியார் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று தரக் கோரி ஜூன் 24 திங்க ளன்று ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்துள்ளார். எல்கேஜி முதல் படித் தும் பத்தாம் வகுப்பில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி தேர்வு எழுத விடாமல் மாணவனின் படிப் பில் மண் அள்ளிப்போட்ட தனியார் பள்ளி நிர்வாகம் அந்த மாணவன் அரசுப் பள்ளியில்கூட சேர்ந்து படிக்க விடாமல் மாற்றுச் சான்றிதழ் தர முடியாது எனக் கூறும் அவலம் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு, அரசுப் பள்ளிகளை தனியார் தத்து எடுக்கலாம் எனக் கூறிவரும் நிலையில் தனியார் பள்ளி களின் கட்டணக் கொள்ளை யையும், மாணவர்களின் நலன் கருதாத அவர்களின் பேராசையின் வெளிப் பாடாக இச்சம்பவம் விழுப் புரம் மாவட்டத்தில் நடை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.