tamilnadu

img

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை, ஏப். 26-வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற் றுள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்போது ‘ஃபானி புயல்’ என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது.இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி இலங்கை வழியாக 30 ஆம் தேதி வடதமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இன்னும் 4 நாட்களில் இந்த புயல் வடதமிழகத்தை நெருங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

இந்த புயல் வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.புயல் கரையை கடக்கும் போது கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள் ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெள்ளியன்று (ஏப்.26) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.புதுச்சேரியிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விடுப்பு எடுத்த அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்பும் படி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

;