tamilnadu

img

விளையாட்டு காயங்களுக்கான தனி சிகிச்சை மையம் துவக்கம்

சென்னை,ஆக. 25- விளையாட்டுப் போட்டி களின் போது ஏற்படும் காயங்களுக்கு தனி சிகிச்சை அளிக்க பெரும்பாக்கத்தில் தனி சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது கிளெனீகிள்ஸ் குளோ பல் ஹெல்த் சிட்டி வளாகத்தில் அமைக்கப்ப ட்டுள்ள இந்த மையத்தை புரோகபடி தமிழ் தலை வாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் அணியின் நட்சத்திர வீரர்கள் முன்னி லையில் தொடங்கிவை த்தார். காயங்களுக்கான சிகிச்சையை வழங்குவ தற்காகவும் மற்றும் எதிர்காலத்தில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும் மற்றும் உடல் திறனை மதிப்பீடு செய்யவும் மருத்து வர்கள், இயன் மருத்துவ நிபுணர்கள், விளையாட்டு மருத்துவவியல் மருத்து வர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகிய சிறப்பு நிபுணர்களை உள்ள டக்கியதாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனையின் எலும்பு முறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவத் துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர் கிளெமென்ட் ஜோசப் கூறினார்.  முழங்கால், தோள்பட்டை, முழங்கை காயங்களுக்கு சிகிச்சை யளிக்கவும் மற்றும் அனைத்து சிக்கலான தசைநார்; மறுகட்டமைப்பு சிகிச்சைகளை மேற்கொள்ள வும் இம்மையம், நிபுணத்துவ திறனைக் கொண்டிருக்கிறது என்று எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவாரெட்டி கூறினார்.