குழந்தைகளை கவரும் கதாபாத்திரங்களில் ஒன்று ஸ்பைடர்மேன். சென்னை வடபழனி போரம் விஜயாமாலில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஸ்பைடர்மேன் வேடமிட்ட நபர், ஸ்பைடர்மேன் - ஃப்ரம் ஹோம் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நடித்து காண்பித்தார். அவருடன் போட்டிபோட்டுக்கொண்டு குழந்தைகளும் தங்களது சுட்டித்தனத்தை வெளிப்படுத்தியது பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.