tamilnadu

img

தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ மோடி அரசின் சதிக்கு எதிராகப் போராட நவ.2 அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘சிறப்பு தீவிர திருத்தம்’  மோடி அரசின் சதிக்கு எதிராகப் போராட நவ.2 அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை, அக். 27 - ஒன்றிய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR)  என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்க ளின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராகப் போரா டுவது குறித்து, தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலை வர்களுடன் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் திங்கட்கிழமை (அக்.27) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், அமைச்சர் கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, என்.ஆர். இளங்கோ, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறு முகநயினார், காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் கே.வி.தங்க பாலு, மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, விசிக பொதுச்செய லாளர் து.ரவிக்குமார், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டி யன், மூத்த தலைவர் இரா. முத்தர சன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய செயலாளர் நவாஸ் கனி  எம்.பி., தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன், மமக தலைமை நிலையச் செய லாளர் ஜெயினுலாபுதீன், இந்திய யூனியன்

முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், கொமதேக தலைமை நிலையச் செயலாளர் செல்வராஜ், மநீம பொதுச் செயலாளர் அருணாச் சலம் மற்றும் டி.கே.எஸ். இளங்கோ வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள்  இந்த ஆலோசனைக் கூட்டத் திற்குப் பிறகு, மதச் சார்பற்ற முற் போக்குக் கூட்டணி  தலைவர்கள் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட் டனர். அதில், மக்களாட்சி மாண்பை சிதைப்பதையும் ஜனநாயகத்தைச் சின்னாபின்னப்படுத்துவதையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது வழக்க மான பழக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதற்கு ஏற்பத் தன்னாட்சி அமைப்புகளையும் தங்கள் விருப்பத்துக்கு வளைத்துச் செயல் படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் அனைத்தும் சர்ச்சைக் குரியதாகவும் சந்தேகத்துக்குரிய தாகவும் இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  பீகார் அனுபவத்தை மேற்கோள் காட்டி எச்சரிக்கை முறையான, வெளிப்படை யான, நேர்மையான தேர்தலை நடத்துவது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி என்ற நிலை யில், சமீபகாலமாகத் தங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் மூல மாகச் சந்தேகத்துக்குரிய தேர்தலை ஆணையம் நடத்தி வருவதாகவும், இதற்கு வெளிப்படையான உதா ரணமாகப் பீகார் தேர்தல் அமைந் துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப் பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமானது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்தது. நம்பிக் கைக்குரிய தகவல்களின்படி, பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டார்கள். மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மாண்பமை நீதிபதிகள் பிறப்பித்த  உத்தரவையே தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை என்றும், இந்த ஜனநா யக விரோதச் செயலைச் செய்யத் தூண்டி யது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் என்றும்  அந்தக் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.  வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் திருத்தம் அவசியமற்றது  இந்த நிலையில், ‘SIR’ என்ற வாக்கா ளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்து, தமிழ் நாட்டுக்கான தேதிகளையும் வெளியிட்டு உள்ளார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டி யல் குறித்த இதுபோன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது மிகமிகச் சிரமம்  ஆகும், நடைமுறை சாத்தியமற்றது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகைப்படம் ஒட்டித் தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை  இணையத் தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலான வாக்காளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப் பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் ஆதார் அட்டையை முழு மையான ஆவணமாக ஏற்க மறுப்பதை யும், குடும்ப அடையாள அட்டைகளை  ஏற்க மறுப்பதையும் அறிக்கையில் கடு மையாகக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  அனைத்துக் கட்சிகளும்  ஒன்றிணைந்து போராட அழைப்பு  “வாக்காளர் பட்டியல் சீரமைக்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்க வில்லை. ஆனால் அதனை அவசர அவசர மாகச் செய்யக் கூடாது. கால அவகாசம்  கொடுத்து, நடைமுறைச் சிக்கல்கள்

இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல்  மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு  இப்போது இதனைச் செய்யத் தொடங்கு வது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்புச் சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளன. பீகாரில்  இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர்,  பெண்கள் என்று குறிவைத்து நீக்கம் நடந்ததாகவும், இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது; ஒன்று சேர்ந்து போராடும் என்றும் கூட்டணிக் கட்சிகள் உறுதி பூண்டுள்ளன.  இது தமிழ்நாட்டுக்கான பிரச்சனை என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாகக் கண்காணித்துத் தடுத்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  நவ.2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற் கும் அனைத்துக் கட்சிக் கூட்டம், வருகிற  நவம்பர் 2 (ஞாயிறு) அன்று காலை 10  மணி அளவில், தியாகராய நகரில் உள்ள  “ஓட்டல் அகார்டில்” நடைபெற இருக் கிறது. இதில், அரசியல் வேறுபாடு களைக் கடந்து தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்  பங்கேற்க வேண்டும் என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன. அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் அடுத்த  கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி  அளிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சியை யும், மக்களின் உரிமைகளையும், தமிழ் நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங் களும் ஒன்று சேர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.