tamilnadu

img

செந்தில் பாலாஜி வழக்கு - 4 மாதத்தில் முடிக்க உத்தரவு!

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூன்று மாதங்களாகியும் விசாரணை நிறைவடையாததால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதி அல்லி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இறுதியில் நான்கு மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கு நான்கு மாதங்களுக்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.