tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

ஜெமினி ஏஐ உதவியுடன் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் வசதி!

கூகுளின் ஜெமினி ஏஐ சாட்பாட் (Gemini AI  Chatbot) உதவியுடன் வாட்ஸ்அப்பில் மெசேஜ்  அனுப்பும் வசதியும், அழைப்புகளை (Calls) மேற்கொள் ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதி யில் இருந்து ஜி-மெயில் (Gmail), கூகுள் மெசேஜஸ் (Google Messages), கூகுள் சர்ச் (Google Search) உள்ளிட்ட செயலிகளுடன் ஜெமினி ஏஐ சாட்பாட்டை ஒருங்கிணைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான வாட்ஸ்அப் செயலியுடனும் ஜெமினி ஏஐ சாட்பாட்டை  கூகுள் ஒருங்கிணைத்துள்ளது. இந்த அம்சத்தை பயன் படுத்த ஜெமினி செயலியில் உள்ள வாட்ஸ்அப்புக்கான Extension-ஐ Enable செய்ய வேண்டும்.  

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் உள்ள ஜெமினி செய லிக்கு சென்று, ப்ரொஃபைல் படத்தை (Profile Picture) கிளிக் செய்தால், Extension என்ற ஆப்ஷனை  காண முடியும். அதனை தேர்வு செய்தால் வாட்ஸ்அப்புக்கான  Extension-ஐ Enable செய்ய முடியும்.

விரைவில் இந்த ஐ-ஃபோன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது!

உலகளவில் 200 கோடி மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் வாட்ஸ்அப் மூலம் தடையின்றி தொ டர்புகொள்ள முடியும். நண்பர்கள்,  உறவினர்களுடனான உரையாடல் கள் மேற்கொள்வது மட்டு மல்லா மல், புகைப்ப டங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றையும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். 

இந்த ஆண்டின் தொடக்கத் தில், இணை யத்தில் இருந்து சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்கும், ஈமோஜிகள், படங்கள்  மற்றும் பலவற்றை உருவாக்குவ தற்கும் Meta AI-ஐ அறிமுகப்படுத்தப் பட்டது. வாட்ஸ்அப் தளத்திலும் இந்த ஏஐ அம்சம் மூலம் வாய்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷனை டெக்ஸ்ட் மெசே ஜாக மாற்றும் அம்சமும் வழங்கப் பட்டது. இந்த அம்சத்தை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்த,  சரியான சாதனங்கள் மற்றும்  இயங்குதளங்களை ஸ்மார்ட் ஃபோன்கள் கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பயனர்களை தங்கள் ஃபோன்களை upgrade செய்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 

இந்த சூழலில், 2025-ஆம் ஆண்டு  மே மாதம் முதல் ஐ.ஓ.எஸ் 15.1 அல்லது புதிய பதிப்புகளைக் கொண்ட ஐஃபோன்களில் மட்டுமே  வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்  என்றும், ஐ.ஓ.எஸ் 15.1-க்கு முந்தைய வெர்ஷன்களில் பயன்படுத்த  முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்ஸ்டாகிராமில்  மெசேஜ் ஸ்கெடியுல் வசதி!

இன்ஸ்டாகிராமில் மெசேஜ்களை ஸ்கெடியுல் (Sche dule) செய்து அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள  டைரெக்ட் மெசேஜ்களுக்கு (Direct Messages) சென்று  நண்பருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்து, பின்னர் Send பட்டனை Long Press செய்தால், மெசேஜ் ஸ்கெடியுல் ஆப்ஷன் காண்பிக்கப்படும். அதில்,  மெசேஜ் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு, Send பட்டனை அழுத்தினால் மெசேஜ் ஸ்கெடி யுல் ஆகிவிடும்.