tamilnadu

img

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

சென்னை,ஜூலை 8- இளம் வழக்கறிஞர்களுக்கு  உத வித்தொகை வழங்கப்படும் என்ற  அரசின் அறிவிப்பு  அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவரும் தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரு மான ஏ.கோதண்டம், மாநிலப் பொ துச்செயலாளர் என்.முத்து அமுதநா தன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தின் சமூக-அரசியல் நிலைமையின் காரணமாக பொருளா தார ரீதியாக பின்தங்கிய  பகுதியிலி ருந்து ஏராளமானவர்கள் சட்டம் படித்து வழக்கறிஞர் தொழிலுக்கு வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் தொழி லில் முழு ஈடுபாட்டுடன் சிறந்து விளங் கிட குறைந்தபட்ச உத்தரவாதப் படுத்தப்பட்ட வருமானம் தேவைப்படு கிறது. குறைந்த பட்ச வருமானம் இல்லாத நிலையில் சட்டம் படித்த இளம் வழக்கறிஞர்கள்   மாற்றுப் பணிகளை தேடிச்செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இளம் வழக்கறிஞர்க ளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  தமிழகத்தில் முதன் முதலாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றி யது.     இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் முதன்முதலாக கோரிக்கை மாநாடு நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தொடர்ந்து மாநில அளவில் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம், கோட்டை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம், மாவட்டங்களில் கருத்த ரங்கம்  என பல்வேறு இயக்கங்களை நடத்தியது. மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்றின. தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

தமிழக சட்ட மன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்க ளும் இந்தக்கோரிக்கையை வலி யுறுத்தி பேசினர். கடந்த 21.9.2019 அன்று விழுப்புரத்தில் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் இந்தக் கோரிக்கைக்காக  தொடர்ந்து நீண்டநெடிய போராட் டத்தை நடத்தி வந்துள்ளது.  இந்நிலையில் கடந்த பட்ஜெட் தொடரில் இளம்வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது  30.6.2020. அன்று தமிழக அரசு அறி விப்பாணையை வெளியிட்டுள்ளது.  

இளம் வழக்கறிஞர்களுக்கு உத வித்தொகை கிடைத்திருப்பது தொடர் போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி ஆகும். போராட்டங்கள் என்றும் வீணாவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்தக்கோரிக்கைக்கான போராட் டத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பங்கு மகத்தானது ஆகும். இந்தக்கோரிக்கை வெற்றி பெற போராடிய அனைவருக்கும் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் தனது நன்றியை தெரி வித்துக்கொள்கிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;