பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் :- உ.பி. மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
ச. சா - வாரணாசி மக்கள நம்பாம இன்னொரு தொகுதிலயும் நிக்கலாமான்னு யோசிக்குற அளவுக்கா..?!?
***
தமிழக அமைச்சர் செங்கோட்டை
யன் :- நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு என்பது வேடிக்கையாக உள்ளது.
ச.சா - இதிலென்ன வேடிக்கை..இடஒதுக்கீட்டுல விதிவிலக்கு இருக்கே...??
***
மத்திய நிதியமைச்சகம் :- முத்ரா திட்டத்தில் வராக்கடன் கட்டுக்குள் உள்ளது.
ச.சா - இதுல கடன் வாங்குனவங்க சின்ன அளவுல தொழில் பண்ற
வங்கதான...?!?!
***
உ.பி.முதல்வர் ஆதித்யநாத் :- அரசியல் சட்டத்தை மதித்து நடப்பது பாஜக கொள்கைகளில் ஒன்று.
ச.சா - பாபர் மசூதி, நீதித்துறை, ரிசர்வ்
வங்கி, சபரிமலைனு நீங்க மதிச்சு நடக்குற லட்சணத்த மக்களும் பாக்குறாங்களே..?!?