தோழர் புத்ததேவ் மறைந்தார் என்ற செய்தி என்னை உலுக்குகிறது. எனக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த தருணத்தில் அவரது மறைவுச் செய்தி கிடைத்தது. கண்கள் பனித்தன. கட்சிக்கும் மேற்குவங்கத்திற்கும் நமது சித்தாந்தத்திற்குமான அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. என்றென்றும் வழிகாட்டும் விதமாக அவர் ஒவ்வொரு பணியையும் முன்னெடுத்துச் சென்றார். கட்சி அளித்த அனைத்துப் பணிகளையும் அதிகபட்சத் திறனுடன் நிறைவேற்றினார்.
செவ்வணக்கம் தோழர் புத்ததேவ்!