tamilnadu

சென்னை மேம்பாலங்களில் ரூ.33 கோடியில் வண்ண விளக்குகள்

சென்னை,மார்ச் 5- சென்னையில் உள்ள மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன்படி பாலங்களின் கீழ்ப் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் வெர்டிக்கல் கார்டன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதை தவிர்த்து சென்னையில் உள்ள பாலங்கள் இரவு நேரத்தில் ஜொலிக்கும் வகையில் ரூ.33 கோடி செலவில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. மின்ட் சந்திப்பில் உள்ள வள்ளலார் நகர், டிடிகே சாலையில் சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு, டவுட்டன் சந்திப்பு, காரன் ஸ்மித் சாலை சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பு, வெஸ்ட் கோஸ்ட் சாலை சந்திப்பு, மியூசிக் அகாடமி சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை பாலம், ஜி.கே.மூப்பனார் பாலம், எல்.பி சாலை பாலம், காந்தி மண்டபம் சாலை பாலம், முரசொலி மாறன் பாலம் உள்ளிட்ட 13 பாலங்களில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.  போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் மாணிக்கர் நகர், எம்சி சாலை, ரிசர்வ் வங்கி, கெங்கு ரெட்டி, கணேசபுரம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம், ரங்கராஜபுரம், துரைசாமி, மேட்லி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை பஜார் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும், ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, பெரம்பூர் சாலை, எழிலகம் உள்ளிடட் 5 சுரங்க நடைபாதைகளிலும் இந்த வண்ண விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

;