tamilnadu

img

ரூ.4.12 லட்சம் மோசடி: மேலாளர் கைது

கடலூர், பிப். 21- சுய உதவிக்குழுவினரிடம் ரூ.4.12  லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறு வன மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகி லுள்ள தில்லைவிடங்கனைச் சேர்ந்த  சுகுமாறன் (28). இவர், சுய உதவிக்குழு வினருக்கு கடன் வழங்கும் தனி யார் நிதிநிறுவனத்தில் விருத்தாசலம் கிளை  மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த  2018-19 ஆம் ஆண்டில் நிதிநிறுவனத்தில்  உறுப்பினர்களாக உள்ள 235 பேருக்கு கடன்  வழங்கி அதனை தவணை முறையில்  திரும்பப் பெற்று வந்தனர்.  இந்நிலையில், அவர்களைத் தொடர்பு  கொண்ட சுகுமாறன் மீதமுள்ள தவணைகளை  மொத்தமாக செலுத்தினால் கூடுதலாக  கடன் பெற்றுத்தருவதாக கூறி யுள்ளார். இதனையடுத்து, மகளிர் சுய  உதவிக்குழுவினர் ரூ.4.12 லட்சம் சுகு மாறனிடம் செலுத்தியுள்ளனர். அதனை பெற்றுக் கொண்ட அவர்  நிதி நிறுவனத்தின் கணக்கில்  செலுத்தாததோடு அவர்களுக்கு போலியாக கடன் இல்லையென சான்றிதழையும் வழங்கியுள்ளார். இத்தகவல் தெரிந்த நிறுவனம்  அவரை வேலையிலிருந்து நீக்கம் செய்த தோடு, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு  காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இதுகுறித்து துணை கண்காணிப்பா ளர் சுந்தரம் தலைமையில் ஆய்வாளர்  தமிழ்ச்செல்வி, உதவி ஆய்வாளர்  அன்பழகன் ஆகியோர் விசாரணை நடத்தி  வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், சுகுமாறன் பணம் கையாடல் செய்தது உண்மையெனத் தெரிய வந்தது. இதனை யடுத்து அவரை கைது செய்தனர்.

;