tamilnadu

img

கற்பித்தல்-வாசிப்பு இயக்கத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.....

சென்னை:
தமிழ்நாட்டில் கற்றல், கற்பித்தல் சிறப்பு வகுப்பு நடத்தும் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கைமீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன், “கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லை. இந்த சூழலில் மாணவர்களை திடீரென பள்ளிக்கு அழைத்து வகுப்புகள் நடத்தினால் பலர் வர விரும்பமாட்டார்கள். ஆசிரியர்களுக்கும் தயக்கம் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் தற்போது குழந்தைதிருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவற்றை திருத்தும் வகையில் மிகச் சிறந்த திட்டமாக ‘கற்பித்தல் வாசிப்பு இயக்கம்‘ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிப்பார்.இந்த திட்டத்துக்கு இந்த நிதி ஆண்டில்ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. பள்ளி நேரத்துக்குப் பிறகு சிறப்புவகுப்புகளை நடத்தும் திட்டம் இதுவாகும் என்றும் நந்தனத்தில் உள்ள நிதித்துறைக்கு சொந்தமான கட்டிடத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் பேராசிரியர்  க.அன்பழகன் மாளிகை என்ற பெயர் சூட்டப்படும் என்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.”

;