tamilnadu

img

விதியை மீறினால் ரூ.100 அபராதம், 14 நாள் தனிமை: சென்னை மாநகராட்சி

சென்னை,மே 2- தமிழகத்தின் தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்க ளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாந கராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்  பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிகளை மீறுவோர் 14  நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னையில் விதியை மீறி தேவையின்றி வெளியே சுற்றினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். விதிகளை மீறும் கடை, நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல்  வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும். தனி மனித இடைவெளி இரு நபர்களிடையே குறைந்த பட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

;