சென்னையில் உள்ள ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,388 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1384 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. 14,902 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 18,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 166 பேர் உயிரிழந்துள்ளனர்; 9,392 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 2,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 2,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 12 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 2,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 23 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 29 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில் 1,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர்.