tamilnadu

img

இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஆக.14 குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்... சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

சென்னை:
இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஆக.14 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் வெள்ளியன்று (ஆக.7) நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.ஆறுமுகநயினார், பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, பொருளாளர் வி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சுருக்கம் வருமாறு:4 மாதமாக நீடிக்கும் ஊரடங்கு காரணமாக 30 லட்சம் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அரசு அறிவித்த நிவாரணம் பெரும் பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, மாதம் 7ஆயிரத்து 500 ரூபாய் வழக்க கோரியதை அரசு கண்டுகொள்ளவில்லை.ஊரடங்கில் தளர்வு அறிவித்து பயணிகள் பேருந்து தவிர ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் எவ்வித பலனும் இல்லை. டாக்சி, கால்டாக்சி, சுற்றுலா வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் வாங்க வேண்டும்.

நியாயமான காரணங்களுக்கு கூட இ-பாஸ் பெற முடியாத நிலையில், வாகனங்களுக்கு கிடைப்பது இல்லை.இந்நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண் டும், ஊரடங்கு அமல்படுத்தப் பட்ட காலத்தில் மாதம் 7ஆயிரத்து 500  ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், மார்ச் மாதம் முதல் இயல்பான போக்குவரத்து தொடங்கும் வரை சாலை வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், வாகன கடன் தவணை செலுத்த டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்க வேண்டும்,வாகனம், பெர்மிட், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்ய டிசம்பர் மாதம் வரை விதிவிலக்கு அளிக்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் மற்றும் உறுப்பினர் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும், பெட் ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.14 அன்று வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு குடும்பத்துடன் சென்று கோரிக்கை அளிக்கும் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;