tamilnadu

img

சென்னையில் குடியரசு தின விழா: முதலமைச்சர்-ஆளுநர் பங்கேற்பு

சென்னை,ஜன.26- நாட்டின் 71 ஆவது குடியரசு தின விழா மாநிலம் முழுமைக்கும் கோலாகல மாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ வந்தார். அவரை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை வந்தார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் ப. தனபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வர வேற்றனர். இவ்விழாவில், தேசிய கொடியை ஆளுநர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். ராணுவப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை பெருநகர பெண்கள் காவல் படை, நீலகிரி படைப்பிரிவு, கேரளா காவல்படை பிரிவு, குதிரைப் படை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட 44 வகையான படைப் பிரிவினர் இதில் அணி வகுத்து வந்த னர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் வீர தீர செயலுக்கான பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, சாமரம் நடனம் நடைபெற்றன. அருணா சலச் பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், மதுரை தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பல்வேறு அரசுத்துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகளும் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சியில் முப்படை தளபதிகள், காவல் துறைத் தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகி  அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், வெளிநாட்டு தூதர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;