tamilnadu

img

சிஏஏ சட்டத்தை திரும்பப்பெறக்கோரி 2 கோடி கையெழுத்துகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு

சென்னை,பிப்.16- குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றை திரும்பப்பெறக்கோரி திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் நடத்திய இயக்கத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டனர்.  பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை மக்களிடம் பெறப்பட்ட  2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82  கையெழுத்துகள் அடங்கிய  படிவங்களை பிப்ரவரி 16 ஞாயிறன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகில்  திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் குடியரசுத் தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திக தலைவர்  கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தங்கபாலு (காங்கிரஸ்), தொல்.திருமாவளவன் (விசிக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), அபுபக்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிப்ரவரி 19 அன்று கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரை சந்தித்து இந்த கையெழுத்துப் படிவங்களை வழங்குகின்றனர்.

;