tamilnadu

img

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. 
நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.  7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் மருத்துவப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார்.
எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். நாமக்கல் மாணவி மோகன பிரபா ரவிச்சந்திரன் 705 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்திலும், சென்னை அயனாவரத்தை சேர்ந்த சுவேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்திலும்  விருதுநகர் மாணவி யாழினி 695 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்திலும் தர்மபுரியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவன் 691 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள்ஒதுக்கீட்டில் தேனி சில்வார்பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.