tamilnadu

உயர் கல்வி தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை, ஏப்.9-

தில்லியில் மனிதவள மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆண்டுக் கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரப்பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். அதில், பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் 9-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. கல்லூரிகள் வரிசையில் மாநில கல்லூரி 3-வது இடத்தையும், லயோலா கல்லூரி 6-வது இடத்தையும் பெற்றிருக்கிறது.இந்த புகழுக்கும், சாதனைக்கும் கடுமையாக உழைத்த துணை வேந்தர் கள், முதல்வர்கள், மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

;