tamilnadu

புதுச்சேரி ,வேலூர் ,சிதம்பரம் முக்கிய செய்திகள்

ஜூலை 22இல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்

புதுச்சேரி, ஜூலை 19- புதுச்சேரி சட்டமன்ற சிறப்புகூட்டத்தொடர் ஜுலை 22இல் நடைபெறுகிது. புதுச்சேரி சட்டப் பேரவைக்கூட்டம் புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட பேரவைத் தலைவர் பதவியேற்பு விழாவுக்காக  ஜுன் மாதம் கூடியது. இந்நிலையில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டம்  ஜுலை 22 திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது. இதற்கான அறி விப்பை பேரவைச் செயலார் வின்சென்ட் ராயர் வெளி யிட்டுள்ளார். இக்கூட்டத்தொடரில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், அதேபோல் மாநிலத்தின் நீர்மேலாண்மை குறித்து விவாதிக்கபடும் எனத் தெரிகிறது.

3 டன் செம்மரக்கட்டை பறிமுதல்

வேலூர், ஜூலை 19- வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காவல்துறையினர் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காவல்துறையினர் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் தப்பியோடி விட்டனர். லாரியை சோதனை செய்ததில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, மூன்று டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. காவல்துறையினர், லாரியுடன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரத்தசுத்திகரிப்பு இயந்திரம்

சிதம்பரம், ஜூலை 19- சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.25  லட்சம் செலவில் ரத்தசுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் ரத்தம் சுத்திகரிப்பு செய்ய  வேண்டும் என்றால் கடலூர், பாண்டிச்சேரிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் மருத்துவர்களின் முயற்சியால் அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2  ரத்த  சுத்திகரிப்பு கருவி புதிதாத நிறுவப் பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் தமிழரசன் கூறு கையில், தற்போது அதி நவீன வசதியுடன் கூடிய 2 ரத்த சுத்திகரிப்பு கருவி பொருத்தப் பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அவ ரது நிதியிலிருந்து உதவி செய்துள்ளார். இங்கு  ஒரு நாளைக்கு 10 பேர் வீதம் ரத்தம் சுத்தி கரிப்பு செய்து கொள்ளலாம். இந்த வசதி  முற்றிலும் இலவசம். இதற்கென்று தனியாக  மருத்துவர், செவிலியர்கள் குழு அமைக்கப் பட்டுள்ளன. இதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.