tamilnadu

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

ஜிப்மரில் சிகிச்சை பெற்றவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை
புதுச்சேரி,ஜூன்.14- ஜிப்மரில் அனுமதிப்பட்டவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை புனே ஆய்வு மையம் அறிவிப்பு. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  நடராஜன் (52). கேரள மாநிலம் குருவாயூர்பகுதியில்  கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த வாரம்அங்கேயே அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் அவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.   பின்னர் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 10ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கேரளப் பகுதியில் இருந்து அவர் கடுமையான காய்ச்சலுடன் வந்ததால் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதனைத் தொடர்ந்து நிபா வைரசுக்கு என்று உள்ள தனி வார்டில்அவரை அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் அவரது ரத்தம்,சிறுநீரகம் ஆகியவைகளை சேகரித்து ஆய்வுக்காக புனேவில் உள்ள மத்திய அரசு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து  ஆய்வு முடிவுகளில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்

புதுச்சேரி, ஜூன் 14- மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வங்கி மூலம் வழங்கும்பணியை   அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் துவக்கி வைத்தார். மத்திய அரசின் ஆணைப்படி 2 மாதத்திற்கு விதிக்கப்படும் மீன்பிடி தடைக்காலத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்யும் வகையில் புதுச்சேரி அரசு 5,500 ரூபாய் வீதம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு மீனவ குடும்பத்தி ற்கும் இழப்பீடாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி  புதுச்சேரி சட்டப்பேரவையில்  மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் வெள்ளியன்று (ஜூன் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கலந்து கொண்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த 19,290 மீனவ குடும்பங்க ளுக்கு ரூ.10 கோடியே 60 லட்சத்து 95 ஆயிரத்திற்கான நிவாரணத் தொகையினை வங்கி மூலம் பட்டுவாடா செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

 

குடிநீர் கேட்டு சாலைமறியல்

விழுப்புரம், ஜூன் 14- விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் உள்ள இரு மின்மாற்றிகள் ஒன்றன் பின் ஒன்றாக பழுது ஏற்பட்டதால் கிராமத்தில் உள்ள குடிநீர் மின் மோட்டா ர்கள் இயங்க மின்சாரம் இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக  குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மின்மாற்றிகளை பழுது நீக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திர மடைந்த கிராமத்தினர் காலிகுடங்களுடன் விழுப்புரம் திருக்கோவிலுர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலைமறியலை கைவிட ப்பட்டது.

;