இலவச வீட்டு மனை, பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, அக்.28 – மலை மற்றும் வனப்பகுதிகளில் குடி யிருக்கும் கிராம மக்களுக்கு 2006 வன உரிமை சட்டப்படி வீடுகளுக்கு பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு நிலம், விவசாய நிலங்களுக்கு பட்டா, கோவில் அடிமனை அனுபவ நிலத்திற்கு தொடர்ந்து விவசாயம் செய்ய உரிமை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் தலைமையிலும், விவசாயிகள் சங்க செயலாளர் பிரகாஷ் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அடி மனை பயனாளிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் சபாபதி, பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கே.சி.ராமசாமி, ஊத்தங்கரை வட்ட செயலாளர் நாகராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ், பொரு ளாளர் எம்.எம்.ராஜு, விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், வட்ட செயலாளர் மாது, மாநில குழு உறுப்பினர் லெனின், போச்சம்பள்ளி விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் கடல்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட ஆட்சி யரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. உடனடியாக மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
