tamilnadu

img

சுரண்டல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திடுக... அனைத்து மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்திடுக...

சென்னை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜனவரி 10  அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வி.சுப்ரமணி யன். தலைமை வகித்தார். அகில இந்திய துணைத்தலைவர் கே.வரதராசன். மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம். மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்ட தலைவர் தாண்டவராயன் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழகம் முழுவதும் சம்பா சாகுபடி நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தனியார் வியாபாரிகளின் சுரண்டலில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வகையிலும். அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவிற்கு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக தமிழக அரசு திறக்க வேண்டும். 

பயிர்க்காப்பீட்டுத்தொகை வழங்கிடுக  
மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு குவிண்டால் சாதாரண ரகம் நெல்லுக்கு ரூ,1815-ம். சன்னரகத்திற்கு ரூ,1835-ம். அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு ஊக்கத்தொகை என்ற பெயரில் சன்னரகத்திற்கு ரூ,70-ம். மோட்டா ரகத்திற்கு ரூ,50-ம் சேர்த்து அறிவித்துள்ளது, ஆனால் கேரள மாநில அரசு விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ,2630 வழங்குகிறது. இது இந்தியா விலேயே மிக அதிக தொகையாகும், எனவே. தமிழக அரசும் கேரளத்தைப் போல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ,2630 கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.     தமிழகத்தில் கடந்த 2018-2019-ம் ஆண்டு பயிரிடப்பட்ட நெல் மற்றும் இதர பயிர்வகைகளுக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுஏற்பட்ட வறட்சியால் மகசூல் பாதிக்கப் பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு சிலமாவட்டங்களில் நெல் விவசாயத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, பல மாவட்டங்களில் நெல் விவசாயத்திற்கும் வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வரு கிறது. குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு வழங்க வேண்டியுள்ளது, 

மேலும் தமிழகம் முழுவதும் காப்பீடு செய்துள்ள இதர பயிர் வகைகளுக்கு முற்றிலும்வழங்கப்படவில்லை, தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்துள்ள விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ஓராண்டு கடந்தும் இழப்பீடுவழங்கப்படாமல் காப்பீட்டு நிறுவனம் பல காரணங்களை கூறி வருவதும். மாநில அரசுகண்டுகொள்ளாமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும். தமிழக அரசு உடன் தலை யிட்டு மேலும் காலம் கடத்தாமல் பயிர்க்காப் பீட்டுத்தொகை வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம்  வழங்கிடுக!
தமிழகத்தில் 6 இலட்சம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளனர். வரும் பொங்கலுக்கு பின் படிப்படியாக அறுவடைக்கு வரவுள்ளது, மக்காச்சோளம் விதைப்பு செய்யும்போது குவிண்டால் ரூ.2500 முதல் 2700 வரை விலை இருந்தது, கடந்த 15 நாட்களில் மக்காச்சோள விலை ரூ.2 ஆயிரத்திற்கும் கீழ் விலை குறைந்து வருகிறது, இந்தாண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு மூன்றுமுறை, நான்குமுறை பூச்சி மருந்துகள் தெளித்தும் கூடுதல் செலவு செய்துள்ளனர். இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் விலை உயர்வு என கூடுதலான செலவுகள் செய்துதான் மக்காச்சோளம் விளைவித்துள்ளனர். இந்த நிலையில் மக்காச்சோளம் விலைவீழ்ச்சி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். எனவே மக்காச்சோளம்குவிண்டால் ரூ.3 ஆயிரம் ஆதார விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.  

குடியுரிமை திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்க!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்குவதற்கான விதிகளில் மோடி அரசு மதத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புலம்பெயர்ந்து வந்தவர்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்காது ஒதுக்கிவைக்க பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச்சட்டம் வழிவகுக்கிறது. மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு பாஜக அரசு செயல்படுகிறது. அகதிகளாக வந்து  30-ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. தேசத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் கொள்கைகளையே மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு விரோதமானது. மதச்சார் பின்மையை பாதுகாத்திட குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்திட வேண்டும்.

;