தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 2024 ஜூலை 22 வரை மொத்தம் 44,61,486 தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.1,664 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் புதியதாக 16,78,138 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.பிற துறைகளுடன் சரிபார்ப்பு பணிகளுக்காக நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களையும், விவரங்களையும் விரைவில் பெற்று கேட்பு மனுக்களை காலதாமதமின்றி விரைந்து முடிக்குமாறு தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்களின் திறனாய்வு கூட்டத்தில் அலுவலர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தினார்.