tamilnadu

img

பிரதமர் கிசான் திட்ட மோசடி: முழுமையாக விசாரணை நடத்த  சிபிஐ கோரிக்கை

சென்னை:
பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பது வெளியாகியுள்ளது. இத்திட் டத்தை செயல்படுத்திய தொடக்க நிலையிலேயே. உண்மையான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். ‘போலி விவசாயிகள்’ சேர்க்கப்படுகின்றனர் என்ற புகார் எழுந்தது. அப்போது அரசு புகாரை மறுத்து, அலட்சியப்படுத்தியது. இப்போது 6 லட்சம்  போலி விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தில் சேர்க்கப் பட்டிருப்பது. மறைக்க முடியாமல் வெளியாகியுள்ளது. நேர்மையான விசாரணை நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் மிகப் பெரும் அளவில் அதிகரிக்கும் என்பதே உண்மையாகும்.

அரசின் திட்டத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டிய, சட்டரீதியான கடமைப் பொறுப்புள்ள அதிகாரிகளே, பயிரை மேயும் வேலிகளாகியிருப்பது மிகவும் கேவலமானது. ஆட்சியாளர்கள் ஊழலில் மூழ்கி கிடப்பதால், இது அதிகாரிகள் மட்டுமே  தன்னிச்சையாக செய்த மோடியாக கருத முடியாது. இது தொடர்பான விசாரணை அதிகாரிகளை பலி கொடுத்து, ஆட்சியாளர்களை காப்பாற்றுவதாக அமைந்துவிடக்கூடாது.இந்த மோசடியில் சம்மந்தப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மோசடிக்கு ஊக்கம் கொடுத்த சக்தி எது? இதில் அதிகார மையத்தின் தொடர்புகள் என்ன? என்பது போன்ற பல முனைகளிலும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.மாநிலம் முழுவதும் பயனடைந்துள்ள விவசாயிகளின் ‘உண்மைத் தன்மை குறித்து’ விரிவாக விசாரிக்க வேண்டும். மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திட்ட நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். அதிகாரிகள் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை அவர்களிடமே வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

;