tamilnadu

img

ஆம்னி பேருந்தை மிஞ்சிய பிரீமியம் தட்கல் ரயில் கட்டணம்

சென்னை,டிச.29- பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து வெளி யூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்துவது வழக்கம். இது பயணிகளி டையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும், இந்நிலைமை இன்னமும் மாறவில்லை. இதனால், ரயில்களில் பயணிப்போரின் எண்ணி க்கை பல மடங்கு அதிக ரித்தது. சிறப்ப ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அப்போதும் பயணிக்கு தேவையான அளவுக்கு கூடுதல் ரயில் இயக்கமுடிய வில்லை.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையும் புதிய பாணியில் கட்டண கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளது. சாதாரண டிக்கெட் 3 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யப்படுகிறது. ஒரு நாள் முன்பு தட்கல் முன்பதிவு செய்யப்படும். தட்கல் டிக்கெட்டுக்கு ரூ.75 முதல் 150 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையில் பிரீமியம் தட்கல் என்ற முறையையும் ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த டிக்கெட்டை பெரும்பாலும் ஆன்-லைனில் எடுத்து விடு கிறார்கள். ஒவ்வொரு ரயிலுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரீமியம் தட்கல் டிக்கெட் ஒதுக்கப்படு கிறது. முன்பதிவு தொடங்கும் போது சாதாரண தட்கல் டிக்கெட் கட்டணத்தில்தான் இந்த டிக்கெட்டும் இருக்கும். டிக்கெட் விற்று தீரதீர கட்ட ணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்று உயர்ந்து கொண்டே போகும். டிச.29 அன்று நாகர்கோவி லிருந்து சென்னை எழும்பூருக்கான பிரீமியம் தட்கல் டிக்கெட் ரூ.2440க்கு விற்றது. (வழக்கமான கட்ட ணம் ரூ.500) முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது. ஆம்னி சொகுசு பேருந்துகளில் கூட நாகர்கோவில்- சென்னைக்கு இன்று ரூ.1500 முதல் ரூ.1700 வரைதான் வசூலிக்கப்பட்டது. அரசு துறைகளே இப்படி செயல்பட்டால் தனியார் துறைகளும் தாறுமாறா கத்தான் வசூலிக்கும். ரயில் கட்டணம் குறைவு. பயண மும் சுகமாக இருக்கும் என்றுதான் பெரும்பாலான வர்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதை சாதகமாக்கி மக்களிடம் இப்படி நூதன முறையில் கட்டண கொள்ளையில் ஈடு படலாமா? என்று பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

;