சென்னை, மே 27-கூடங்குளம் அணுமின்நிலையத்தின் தொழில்நுட்பப் பங்குதாரரான ரஷ்ய அரசின் ரொசாட்டம் அணுசக்தி கழகம் நோவோவோரோனெஷ் நகரில் அமைத்துள்ள புதுமையான இரண்டாவது நவீன அணுசக்தி ஆலைமுதல் முறையாக மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:வி.வி.இ.ஆர் 1200 புதிய அணு உலையில்மார்ச் 22 ஆம் தேதியன்று குறைந்தபட்ச மின் உற்பத்தி செய்து பரிசோதிக்கப்பட்டது. அதன் மின் உற்பத்தி திறன் தற்போது 240 மெகாவாட்டை எட்டியுள்ளது.மிக உயரிய தயாரிப்பாக வி.வி.இ.ஆர்.-2 அணு உலை இங்கு உள்ளது. இந்த அணுஉலைதான் அனைத்து வகையிலும் மேம்படுத்தப்பட்டு ஈரான் (புஷர்),இந்தியா (கூடங்குளம்) சீனா (டினாவான்) ஆகியஇடங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.இதன் செயல்திறன் 7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கானபணியாளர்கள் தேவையும்30 முதல் 40 விழுக்காடுஅளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணு உலையின் ஆயுள்காலம் இரு மடங்குஅதிகரிக்கப்பட்டு 60ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 ஆண்டுகள் வரையில் இதன் ஆயுள்காலத்தை நீடித்துக் கொள்ளமுடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.