tamilnadu

img

பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சேசு(60).

நடிகர் சந்தானத்தோடு இவர் நடித்த A1 திரைப்படம் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்களில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், சேசுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகத்தினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.