tamilnadu

img

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

சென்னை, ஜன.11- 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்ல இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும் பொங்கல் முடிந்த பிறகு, பணியிடங்களுக்கு மீண்டும் செல்வதற்கு வசதியாக பிற மாவட்டங்களில் இருந்து வருகிற 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
www.tnstc.in, tnstc official app போன்ற இணையதளம் மூலமாகவும் பயணிகள் முன்பதிவு செய்துக்கொள்ளாம்.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

;