tamilnadu

img

காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்

காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன்,  மாவட்டப் பொருளாளர் சிவராஜ், வருவாய்த்  துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் விக்டர் சுரேஷ்குமார், அரசு ஊழியர்கள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் லெனின்,  உள்ளிட்ட பலர் பேசினர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு வரு வாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கோவிந்தன் பேசினார்.